×

தஞ்சையில் களோக்கோ கால்பந்து கழக துவக்க விழா ஓவியம், கட்டுரை போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கல்

தஞ்சாவூர், மே 3: களாக்கோ கால்பந்து கழகத்தின் தொடக்க தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்ட அளவிலான ஓவியம் மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுமார் 110 மரக்கன்றுகள் நடப்பட்டும், இலவசமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புவி வெப்பமடைதல், போதை ஒழிப்பு என்ற தலைப்பில் தஞ்சை லிட்டில் ஸ்காலர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டிக்கு பள்ளி தாளாளர் நடனசிகாமணி தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட அனைத்து பிரிவினருக்கும் ரூ. 7,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது.

The post தஞ்சையில் களோக்கோ கால்பந்து கழக துவக்க விழா ஓவியம், கட்டுரை போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Choco Football Club ,Thanjavur ,GALACO Football Club ,Inauguration Ceremony ,Thanjavur Painting and Essay Contest ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...